உலகம்

வடக்கு தான்சானியாவில் நிலச்சரிவு : 47 பேர் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தான்சானியாவின் தலைநகர் டோடோமாவிற்கு வடக்கே சுமார் 300 கிமீ (186 மைல்) தொலைவில் உள்ள கடேஷ் நகரத்தில் குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று (03.12) மாலை வரை இறப்பு எண்ணிக்கை 47 ஐ எட்டியது எனவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும்  (04.12) மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தான்சானியாவின் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன், துபாயில் COP28 காலநிலை மாநாட்டிற்காக, தனது இரங்கலை அனுப்பினார் மேலும் “மக்களை மீட்பதற்கான கூடுதல் அரசாங்க முயற்சிகளை” பயன்படுத்த உத்தரவிட்டார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!