சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு : 28 பேரை தொடர்ச்சியாக தேடி வரும் அதிகாரிகள்!
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில், மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 28 பேரை தேடி வருவதாக மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜுன்லியன் கவுண்டியில் உள்ள ஜின்பிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,000 பணியாளர்கள் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் விழுந்த கட்டிடங்களின் எச்சங்கள் வழியாக, ட்ரோன்கள் மற்றும் உயிர் கண்டறிதல் ரேடார்களைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)