தாய்லாந்தின் சீனி தொழிற்சாலையை அமைப்பதற்கான நிலம் ஒதுக்கீடு!

தாய்லாந்தின் Sutech Sugar Industries கம்பனியால் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வவுனியாவில் கரும்பு பயிரிடலை மேற்கொள்வதற்கும், சீனி உற்பத்தி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28.06) முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி இந்த முதலீட்டை மேற்கொள்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பற்றைக்காடுகளைக் கொண்ட வவுனியா வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 200 ஹெக்ரெயார் காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)