ஐரோப்பா

தொழிலாளர் கட்சி பிரித்தானியாவிற்கு ஆபத்தானது – கிராண்ட் ஷாப்ஸ் எச்சரிக்கை!

பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது ஆட்சிக்கு வந்தால் அதிகளவிலான வரியை அறிமுகப்படுத்தும் என பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கிராண்ட் ஷாப்ஸிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் இன்னும் யாரும் வாக்களிக்கவில்லை என்றும், கருத்துக்கணிப்புகள் அந்த நேரத்தில் ஒரு ஸ்னாப்ஷாட் தான் என்றும் கூறியுள்ளார்.

தொழிற்கட்சி அரசாங்கம் “இந்த நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்த அவர், நாங்கள் ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தை வைத்திருக்க முடியாது.” என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் வீடுகள், கார்கள், ஓய்வூதியம் உள்பட அனைத்து துறைகளில் வரி அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 29 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்