பணக்கார நாடாக மாறிவரும் குவைத்

உலகின் பணக்கார அரபு நாடுகளில் குவைத் முதலிடத்திலும், உலக அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக புள்ளியியல் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது.
குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் 1 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தனியார் சொத்துக்களை வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் உலக அளவில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 15.5 சதவீத மக்கள் பணக்காரர்கள்.
இரண்டாவது இடத்தில் உள்ள ஹாங்காங்கில், 15.3 சதவீத மக்கள் பணக்காரர்கள் என்று அறிக்கை கூறுகிறது.
அதாவது, முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நாடுகளுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள குவைத்துக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப சிறிது வித்தியாசம் உள்ளது.
(Visited 10 times, 1 visits today)