சதத்தை தவறவிட்ட குசல் மெண்டிஸ்: 272 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி 271 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 271 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை விளாசினார். ஜனித் லியகனே Janith Liyanage 46 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் Adil Rashid மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.





