அன்பு மழையில் நனைந்த கிருத்தி சனோன்: வைரலாகும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கிளிக்ஸ்!
கிருத்தி சனோன் நத்தார் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய படங்கள் இணையதளங்களில் வலம் வருகிறது.

கிருத்தி சனோன் இந்தியத் திரைப்படத்துறையில், குறிப்பாக ஹிந்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை. அவர் தனது கடின உழைப்பால் மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடித்தவர்.
இவர் ஒரு பொறியியல் பட்டதாரி (B.Tech in Electronics and Communication). நடிப்பிற்கு வருவதற்கு முன்பு ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராவதற்கு முயன்று வந்தார்.

முதன் முதலில் 2014-ல் தெலுங்குத் திரைப்படமான நேநோக்காடினே (Nenokkadine) (மகேஷ் பாபுவுடன்) மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு ஹிந்தியில் ஹீரோபாண்டி (Heropanti) எனும் படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார்.

2021-ல் வெளியான மிமி (Mimi) திரைப்படத்தில் வாடகைத் தாயாக நடித்ததற்காக, இந்தியாவின் மிக உயரிய தேசிய திரைப்பட விருதை (சிறந்த நடிகை) 2023-ல் வென்றார்.
அவர் நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்கள்:தில்வாலே, பரேலி கி பர்பி, லூக்கா சப்பி, மிமி (Dilwale, Bareilly Ki Barfi, Luka Chuppi ), Mimi, மற்றும் சமீபத்தில் வெளியான க்ரு (Crew ) ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.

ஆதிபுருஷ் (Adipurush): பிரபாஸுடன் இணைந்து நடித்த இந்தப் படம் இவருக்கு இந்தியா முழுவதும் பெரும் புகழைத் தேடித்தந்தது.

மேலும் இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஒரு வெற்றிகரமான மாடலாக இருந்தார். இவர் ஒரு சொந்த ஸ்கின்கேர் பிராண்ட் (Hyphen) மற்றும் உடற்பயிற்சி நிறுவனம் (The Tribe) ஆகியவற்றை நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது கிருத்தி ஒரு பயிற்சி பெற்ற கதக் (Kathak) நடனக் கலைஞர் அவர்.






