தென் கொரியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு – 200 விமானங்கள் இரத்து

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன.
1907ஆம் ஆண்டுக்குப் பிறகு சியோலில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பொழிவு இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவுடன் பலத்த காற்றும் மழையும் பெய்து வருகிறது.
இதன்படி, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் வீதித் தடைகள் போன்றவற்றால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இந்த பேரிடர் சூழ்நிலையால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பணியாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
(Visited 62 times, 1 visits today)