ஐரோப்பா செல்வதற்காக கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கும் மக்கள் : பாதியில் பறிப்போகும் உயிர்!
ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளை அடையும் முயற்சியில் பலர் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பயணித்து தங்களுக்கு உயிரை தியாகம் செய்கின்றனர்.
அந்தவகையில் கடத்தல்காரர்கள் ஒரு டிங்கி படகில் 70 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது படகில் இருந்து இடரிவிழுந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏற்கனவே சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி இந்த ஆண்டு குறைந்தது 60 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)