இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு – பல தகவல்கள் அம்பலம்!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இரு பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நிழல் உலக தாதா பூகுடு கண்ணா என்பவரின் சகா ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

காரொன்றில் வருகை தந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனர்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 43 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

கொலையாளிகள் பயணித்த கார் கொழும்பு, ஆமர்வீதி பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நிழல் உலக தாதா பூகுடு கண்ணா என்றழைக்கப்படும் புஷ்பராஜ் மற்றும் நிழல் உலக தாதா பழனி ரிபோஷன் ஆகிய இரு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மோதலின் விளைவாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர் பூகுடு கண்ணாவின் சகாவென தெரியவந்துள்ளது. அவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவருகின்றது. காருக்குள் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வைத்து மூவர் கைதாகியுள்ளனர்.

இவ்வருடத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 103 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 54 பேர் பலியாகியுள்ளனர். 56 பேர் காயமடைந்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!