கவனம் ஈர்க்கும் கவினின் “கிஸ்” பட டீசர்

நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை.
தொடர்ந்து, வெற்றி மாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துவந்த கிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, கிஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
(Visited 14 times, 1 visits today)