அவுஸ்ரேலியாவிற்கு பயணமாகியுள்ள மன்னர் சார்ல்ஸ் மற்றும் கமிலா தம்பதியினர்!

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் தென் பசிபிக் பகுதியில் தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இன்றைய தினம் அவர்கள் சிட்னியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து மன்னர் சார்ல்ஸ் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறை பயணமாக இது அமைந்துள்ளது.
அரச குடும்பத்தின் சமூக ஊடக சேனல்களில் வெளியிடப்பட்ட செய்தியில், இந்த பயணத்தில் அசாதாரணமான பணக்கார கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைக் கொண்டாடுவதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)