செய்தி

புட்டின் பரிசளித்த சொகுசு காரில் வலம் வந்த கிம்

அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிசாக தந்த லிமோசின் சொகுசு காரில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், முதன்முறையாக பொது இடங்களில் வலம் வந்தார்.

ரஷ்யா வடகொரியா இடையேயான நட்பை, உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதினை கிம் சந்தித்துப் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான நட்பு அதிகரித்துள்ளது.

இரு நாடுகளும் ராணுவ உறவுகளை மேம்படுத்தவும் உறுதியளித்துள்ளன.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஏவுகணைகளையும் பீரங்கி குண்டுகளையும் தயாரித்து அளித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவரும் குற்றச்சாட்டை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன.

இதற்கிடையே, வடகொரிய ராணுவத்தினரின் போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!