மியன்மார் நாட்டவர்களிடம் சிறுநீரக பரிவரித்தணை : இந்தியாவின் முக்கிய மருத்துவனை மீது விசாரணை!
மியான்மர் நாட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகங்களைப் பெற்ற குற்றச்சாட்டில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனை மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் கிளை ஆகும். இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி சுகாதார அதிகாரிகளுக்கு இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட சிறுநீரகங்கள் பணக்கார மியன்மார் பிரஜைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செயல்முறை “சிறுநீரகத்திற்கான பணம்” என்று அழைக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.