கென்யா:நாடு தழுவிய எதிர்ப்புகளுக்குப் பிறகு அமைச்சரவையைக் கலைத்தார் அதிபர் வில்லியம் ரூட்டொ
கென்யாவில் புதிய வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வாரங்களாக தீவிர போராட்டங்கள் நடந்துள்ள சூழலில், தனது அமைச்சரவையை அதிபர் வில்லியம் ரூட்டோ வியாழக்கிழமை கலைத்தார். திறன் வாய்ந்த புதிய அமைச்சரவையை விரைவிர் அமைப்பதாகவுத் அவர் உறுதியளித்தார்
மேற்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் அதிகரித்து வரும் விலைவாசியை குறைப்பதற்காக வாக்குறுதி அளித்து கடந்த 2022ல் ஆட்சியை பிடித்த ரூட்டோ, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீர்திருத்தங்களை அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி அறிவித்து அவர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து. இதில் 30 பேர் உயிரிழந்தனர். இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்ப பெற்றார்
(Visited 5 times, 1 visits today)