கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த போது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 09 மணியளவில் ஆரம்பமான வாக்குமூலம் பெறும் நடவடிக்கை 9 மணித்தியாலங்களை கடந்த நிலையில், அவரை கைது செய்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)