கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தியின் திருமணம் – வைரலாகும் உதட்டு முத்தம்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த 12ஆம் தேதி கோவாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
அதேபோல் இன்று அதாவது, டிசம்பர் 15ஆம் தேதி கிருஸ்துவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்துள்ளார்.
கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரையில் கோலிவுட்டில் தனது திரை வாழ்க்கையை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தொடங்கினார். அதன் பின்னர் முன்னணி நடிகையாக மாறினார்.
தனது பள்ளிக் காலத்தில் இருந்தே காதலில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், அந்த காதலில் மிகவும் உறுதியாக இருந்தார்.
தனது காதலர் ஆண்டனி தட்டிலை கரம் பிடிக்க வீட்டில் மிகவும் கடுமையாக போராடி, சம்மதம் பெற்றார்.
கடந்த 12ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் கோவாவில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார். இந்த திருமணத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 15ஆம் தேதி கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அதன் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.