“கரூர் சம்பவம் என்னை துரத்துகிறது” – விஜயம்
“கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது.”
இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் TVK தலைவர் விஜய் Vijay தெரிவித்தார்.
NDTV நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் விஜய் பங்கேற்றார். அவரிடம் பல கேள்விகள் எழுப்பட்டன.
அவற்றுக்கு அவர் வழங்கிய பதில்களின் சுருக்கம் வருமாறு,
33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.
கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன்.
அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. அரசியல்தான் எனது எதிர்காலம். எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம்.
வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.
கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது.
நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.
எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்விணை ஆற்றுவதில்லை.
நான் என்ன அனுபவித்தேன் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.





