தமிழ்நாடு

கரூர் விவகாரம் – விஜய்யின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள குறிப்பில், மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கான சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தை தொடர்ந்து கரூரில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்றிருந்தார். அவரை காணுவதற்காக ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். சுமார் 30000 பேர் வரையில் அந்த கூட்டத்தில் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்போது பிரச்சாரம் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில் அக்கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வண்டியொன்று வந்திருந்தது. இந்த வண்டிக்கு வழிவிடும்படி விஜய் கேட்டுக்கொண்டார்.

இதற்கிணங்கிய மக்கள் அதற்கு வழிவிட்டனர். இதன்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏறக்குறைய 41 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து அப்பகுதியின் எம்.எல்.ஏ சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சம்பவ  இடத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள் பலரும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட செயல்தான் இது என குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், சிலர் விஜய் தரப்பில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே விஜய் நேற்றைய தினம் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த காணொளியில் பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டால் தன்னை மட்டும் குறிவைக்கும்படியும், மக்களை விட்டுவிடும்படியும் கோரியிருந்தார். தற்போது இந்த விவகாரமும் பூதாகரமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்