கார்த்தியின் ஜப்பான் ஆடியோ லான்ச்… லோகேஷ், சூர்யா இணைவு… அட இது போதுமே
கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான், அடுத்த மாதம் வெளியாகிறது.
தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதில், கார்த்தியின் அண்ணன் சூர்யா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் மிக முக்கியமானவர் கார்த்தி. பருத்தி வீரன் முதல் பொன்னியின் செல்வன் 2 வரை கார்த்தி நடித்த படங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளருக்கும் லாபம் கொடுத்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்ந வரிசையில் ஜப்பான் படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள ஜப்பான், தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. அதன்படி அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகும் ஜப்பான் டீசர் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது. விரைவில் ஜப்பான் ட்ரெய்லரும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில், பல சுவாரஸ்யங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கெல்லாம் காரணம் சூர்யாவும் லோகேஷ் கனகராஜ்ஜும் தான். கார்த்தி – லோகேஷ் கூட்டணி கைதி படத்தில் செம்ம மெர்சல் ஹிட் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக கைதி 2ம் பகத்திலும் இக்கூட்டணி அதகளம் செய்யும் என எதிர்பார்ககப்படுகிறது.
இதனால் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் லோகேஷ், கைதி 2ம் பாகம் பற்றி லீட் கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேபோல் சூர்யாவும் ரோலக்ஸ் திரைப்படம் பற்றி அப்டேட் கொடுப்பார் என சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ், சூர்யா தவிர கார்த்தியை இதுவரை இயக்கிய இயக்குநர்களும் நாளைய ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.