பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் கர்நாடக மாநிலம்!
கர்நாடகா, முறையான வேலைகளில் உள்ள அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின் கீழ், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 18 முதல் 52 வயது வரையிலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுப்பு பெற மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்பதும் விசேட அம்சமாகும்.
பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கின்றன, அதே நேரத்தில் கேரளா பல்கலைக்கழக மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவன ஊழியர்களுக்கு அதை வழங்குகிறது.
இதேவேளை ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த கொள்ளை நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




