பொழுதுபோக்கு

அடுத்தக் கட்டத்துக்குச் சென்ற கங்குவா… தரமான சம்பவம் லோடிங்

சூர்யாவின் கங்குவா படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

10 மொழிகளில் உருவாகும் கங்குவா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி சூர்யா கேரியர் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ரொம்பவே ஸ்பெஷலான மூவியாக உருவாகிறது கங்குவா. அடுத்தக் கட்டத்துக்குச் சென்ற கங்குவா சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

சூர்யாவின் 42வது படமான கங்குவாவை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படம் மூலம் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானியும், முக்கியமான பாத்திரங்களில் யோகி பாபு, நட்டி ஆகியோரும் நடிக்கின்றனர். கங்குவாவின் முதல் அபிஸியல் அப்டேட் வரும் போதே, இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதேபோல், 3டி டெக்னாலஜியில் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் பீரியட் ஜானரில் ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகிறது கங்குவா. அப்போது முதலே கங்குவா படத்திற்கு தாறுமாறாக ஹைப் ஏற்பட்டது. அதன்பின்னர் சூர்யா பிறந்தநாளில் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இன்னும் மாஸ் காட்டியது. கடைசியாக தீபாவளி ஸ்பெஷலாக கங்குவா படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

கங்குவா மொத்தம் 38 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக செம்ம ஷாக் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் 3டி வெர்ஷன், ஐமேக்ஸ் வெர்ஷன் என டெக்னிக்கலாகவும் கங்குவா மாஸ் காட்டும் எனக் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துள்ள இந்த அப்டேட்கள், சூர்யா ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. இதன் மூலம் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!