‘நிலா வரும் வேளை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பால் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
இவர் தற்போது மிராக்கிள் மூவிஸ் தயாரிப்பில் ‘நிலா வரும் வேளை’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தமிழில் காளிதாஸ் ஜெயராமும் தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனாவும் கதாநாயகனாக நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இதற்கு முன்பு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹரி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காட்டில் பூஜையுடன் தொடங்கியது.
(Visited 11 times, 1 visits today)