May 16, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா வட அமெரிக்கா

ககோவ்கா அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா. சபை கருத்து

உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6ம் திகதி உடைந்தது. இதனால் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.

இந்நிலையில் இந்த அணை உடைப்பின் தாக்கம் குறித்து ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறுகையில், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, “கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உடைப்பின் காரணமாக, வரப்போகும் பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது.

சுமார் 7 லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இந்த உடைப்பின் காரணமாக சுத்தமான குடிநீர் இல்லாமல் மக்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும்.

ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்த பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. “யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்” என்றும் கிரிஃபித்ஸ் கூறினார்.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்