காபூல் குண்டுவெடிப்பு : ஆப்கானிஸ்தானில் உள்ள சீன பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீன உணவகம் மீது ISIS பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தனது குடிமக்களைப் பாதுகாப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் குவோ ஜியாகுன் (Guo Jiakun) வெளியிட்டுள்ள செய்தியில், சீனா அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறது மற்றும் உறுதியாக எதிர்க்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து வகையான பயங்கரவாத வன்முறைச் செயல்களையும் கூட்டாக எதிர்த்துப் போராடுவதில் ஆப்கானிஸ்தானையும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் ஆதரிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும், “சீன நாட்டினரின் திட்டங்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சீன நாட்டினர் மற்றும் நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேறவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





