இலங்கை

மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம்

ஜோதிர்லிங்க அருங்காட்சியம் இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் திறந்துவைக்கப்பட்டது

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் இதுவாகும்

பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக் கூடத்தின் நினைவு படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வரலாற்று புகழ்பெற்ற 12 சிவ ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜோதிர்லிங்கக் கலைக்கூடமும் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில்  மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளரும் இலங்கை நிருவாக குழு உறுப்பினருமான சகோதரர் வீ.கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் தெய்வீக சகோதரர் சார்லி ஹொஹ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி செயலாளர் மேனகா, கிராம சேவகர், பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!