செய்தி விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Rahmat Shah அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூர்ய மற்றும் அசித பெர்ணான்டோ அகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 439 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஏன்ஜலோ மெத்திவ்ஸ் 141 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 107 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சாரபில் Naveed Zadran 4 விக்கெட்டுக்களையும், Nijat Masood மற்றும் Qais Ahmad ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில், தனது இரண்டாது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பில் Ibrahim Zadran 114 ஓட்டங்களையும், Rahmat Shah 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களையும், அசித பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் மற்றும் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 56 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்ற வெற்றி இலங்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் துமித் கருணாரத்ன 32 ஓட்டங்கயைும், நிஷான் மதுசங்க 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

 

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content