ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் – கனடாவுக்கான புதிய பிரதமர் இன்று தேர்வு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக உள்ளதால் கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார்.
கனடா பிரதமராக செயற்பட்ட ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி விட்டார்.
இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார். இதையடுத்து கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார்.
59 வயதான மார்க் கார்னி அடுத்த பிரதமராகலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கனடாவுக்கு எதிராக டிரம்ப் வர்த்தக போர் அறிவித்துள்ள இந்த நேரத்தில் அதை சமாளிக்கும் வகையில் மார்க் கார்னி செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 40 times, 1 visits today)