கனடாவின் ஆயுதப்படைகளுக்கு ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்த உத்தரவு!
கனடாவில் ஆல்பர்ட்டாவில் உள்ள ஜாஸ்பர் தேசிய பூங்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆயுதப்படைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பூங்கா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து 25,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆல்பர்ட்டாவில் உள்ள ஜாஸ்பர் நகரம் மற்றும் ஜாஸ்பர் தேசிய பூங்கா ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ட்ரூடோ, “வளங்கள், வெளியேற்ற ஆதரவு மற்றும் கூடுதல் அவசர காட்டுத்தீ ஆதாரங்களை உடனடியாக மாகாணத்திற்கு அனுப்புவதாகவும் — நாங்கள் தீயணைப்பு மற்றும் விமான உதவியை ஒருங்கிணைத்து வருகிறோம்” என்றும் கூறினார்.
(Visited 7 times, 1 visits today)