பொழுதுபோக்கு

குழந்தை பிறந்த பின் ரங்கராஜூக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கிறிஸில்டா

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிறிஸில்டா தான் இன்றைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, ஜாய் கிறிஸில்டா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

பின்பு  மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமணமாகுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டார்.

பின்பு  மாதம்பட்டி ரங்கராஜன்தன்னை ஏமாற்றியதாக முறைப்பாடு செய்தார்.

இறுதியாக தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் மாதம் மாதம் பணம் வேண்டும் என்றும் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் ஜாய் கிறிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த நாள் முதல் அடுத்தடுத்து ரங்கராஜூக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றர் கிறிஸில்டா.

முதலில் குட்டி ரங்கராஜ் பிறந்துவிட்டார் என்றார். பிறகு தந்தையின் பெயர் ரங்கராஜ் என்று குறிப்பிட்டு குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டார்

இப்போது குழந்தையும் தந்தையும் ஒரே சைகை காட்டுவது போனற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது இவ்வளவும் ஒரு புறம் இருக்க, மாதம்பட்டி ரங்கராஜ் எதும் அறியாதவர் போல் இருக்கின்றார். இதில் ஹைலைட் என்னவென்றால் முதல் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கின்றார்

அப்படி என்றால் இது எப்படியான வாழ்க்கை முறை என்று தெரியாமல் இணையவாசிகள் அனைவரும் குழப்பத்தில் உள்ளார்கள். இது எங்கே போய் முடியப்போகின்றது என்றும் தெரியவில்லை….

 

(Visited 5 times, 5 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!