இங்கிலாந்து குடும்ப மருத்துவர்கள் இணைந்து எடுத்த கூட்டு நடவடிக்கை : 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
இங்கிலாந்து முழுவதும் உள்ள குடும்ப மருத்துவர்கள் தங்களது புதிய ஒப்பந்தம் தொடர்பாக 60 ஆண்டுகளில் முதல் முறையாக கூட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவாக அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
பங்கேற்ற 8,500 க்கும் மேற்பட்ட GP களில் 98.3% பேர் ஆதரவாக வாக்களித்த பிறகு, பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) அமைத்துள்ள தொடர் நடவடிக்கைகளில் இருந்து அவர்களால் தேர்வு செய்ய முடியும்.
இந்த நடவடிக்கை “மாதங்கள்” நீடிக்கும் என்றும், NHS நிர்வாக ஊழியர்கள் அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையை 25 ஆகக் கட்டுப்படுத்துதல், இ-பரிந்துரை மற்றும் வழிகாட்டல் சேவையில் ஈடுபடுவதை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.





