புதிய உலக சாதனை படைத்த ஜோ ரூட்

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் தொடங்கியது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது.
இத்தகைய சூழலில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் செய்து சதமடித்து அசத்தினார்.
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் ஜோ ரூட் அடித்த 9வது டெஸ்ட் சதம் இதுவாகும். இதன் மூலம் சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக 8 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.