ஐரோப்பா

பிரான்சின் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் ஜோ பைடன் இணைந்து பணியாற்றுவார்: வெள்ளை மாளிகை

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சின் தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இணைந்து பணியாற்றுவார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியஒன்றிய வாக்கெடுப்பில் மரைன் லு பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த மாத இறுதியில் உடனடியாக சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“பிரான்ஸ் எங்கள் பழமையான நட்பு நாடு. மேலும் பிரெஞ்சு மக்கள் யாரை தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் எப்போதும் பணியாற்றுவோம்” என்று கிர்பி கூறினார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!