சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜிம்மி லாய் குற்றவாளி என அறிவிப்பு!
சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைய ஜிம்மி லாயை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சதி செய்ததாகக் கூறி, ஹாங்காங்கின் உயர் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது.
இதற்கமைய அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஹாங்காங் நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மை குறித்தும் விமர்சகர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது.





