தமிழ்நாடு

கோவையில் 2 நாளில் 5 பெண்களிடம் நகை பறிப்பு – நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த தனிப்படை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை தேடி வருகிறனர். மேலும்

செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் உட்பட பல இடங்களில் மாநகர் முழுவதும் பொலிஸார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!