சீனா, ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்த ஜப்பான் – கைகோர்த்த அமெரிக்கா!
ஜப்பான் மற்றும் தென்கொரியாவை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் ஜப்பான் கடலில் அமெரிக்க அணு ஆயுதத் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் போர் விமானங்களுடன் பறந்ததாக டோக்கியோ (Tokyo) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம்க வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானும் அமெரிக்காவும் “தற்போதைய நிலையை பலத்தால் மாற்றுவதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் தடுக்க உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சுய பாதுகாப்புப் படைகள் (SDF) மற்றும் அமெரிக்கப் படைகள் இரண்டின் தயார்நிலையையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனா இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் H-6K குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 27 விமானங்கள், தீவைச் சுற்றி போர்க்கப்பல்களுடன் ரோந்து சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.





