வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள ஜப்பான்!
ஜப்பான் அமைச்சர் யசுகஸு ஹமாடா வடகொரிய ஏவுகணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தனது நாட்டின் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைப்பதற்கு ஒரு நீண்ட தூர ஏவுகணை தேவைப்படும் என்பதால், அதனை ஏவுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏனெனில், அத்தகைய பயிற்சிகளை பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சோதனைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.
இந்த நிலையில், வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகுமாறு ஜப்பான் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டின் அமைச்சர் யசுகஸு ஹமாடா தற்காப்பு படைகளிடம், ‘பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிறவற்றுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது’ என பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலிஸ்டிக் ஏவுகணை விழுந்தால் சேதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என ஹமாடா தனது துருப்புகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திட்டமிட்ட திகதியில் செயற்கைக்கோள் அனுப்பப்படும் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மட்டுமே கூறியுள்ள நிலையில், ஏவுதல் திகதியை பியோங்யாங் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.