ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் மக்களுக்கு கடுமையாகும் சட்டம் – சிறைத்தண்டனை விதிக்கப்படும்
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் மக்களுக்கு கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டம் நடப்புக்கு வருகிறது.
அதற்கமைய, சைக்கிளோட்டும்போது அவர்கள் இனி கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது ஒரு லட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய போக்குவரத்து விதிகளின்படி, குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டினால், 3 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் யென் அபராதமும், சைக்கிளை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு 3 லட்சம் யென் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)