ஜப்பானில் நில அதிர்வு
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஷிமானே (Shimane) மாகாணத்தில் இன்று (ஜனவரி 6) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10.18 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 மெக்னிடியூட் (Magnitude) அளவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே டோட்டோரி, சுகோகு உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலும் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
முதலாவது நில அதிர்வைத் தொடர்ந்து, சரியாக காலை 10.30 மணியளவில் யசுகி (Yasugi) பகுதியில் 5.1 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் வீடுகளில் உள்ள தளபாடங்கள் சரிந்து விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பாரிய உயிரிழப்புகளோ அல்லது சுனாமி அச்சுறுத்தலோ இதுவரை ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷிமானே அணுமின் நிலையத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், அடுத்த சில தினங்களுக்கு நில அதிர்வுகள் தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





