ரசிகர்கள் அதிர்ச்சி! ‘ஜனநாயகன்’ ரிலீஸில் நீடிக்கும் இழுபறி!
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாகக் கூறி, கெவிஎன் தயாரிப்பு நிறுவனமான கெவிஎன் தயாரிப்பு நிறுவனம் (KVN Productions), சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கை இன்று (ஜனவரி 7) தாக்கல் செய்தது.
அதில் இந்தப்படம் டிசம்பர் 18-லேயே தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கை குழுவும் முதலில் ‘U/A’ சான்றிதழ் வழங்கப் பரிந்துரைசெய்த நிலையில், இப்போது திடீரென ‘மறுஆய்வு குழுவிற்கு’ (Revising Committee) படத்தை அனுப்பியது ஏன்? என நீதி மன்றத்தில் கேள்வி எழுப்பிஉள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி P.T. ஆஷா, தணிக்கை வாரியத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். படத்திற்கு எதிராக வந்துள்ள புகார்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் திகதி ஜனவரி 9 என்பதால், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மற்றும் முக்கிய தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமைக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





