விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் சூப்பர் அப்டேட் வெளியானது
ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிகவும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று ஜனநாயகன். இதற்கு காரணம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால்.
இனி விஜய்யை திரையில் பார்க்க முடியாது என்ற சோகம் இருந்தாலும், அரசியல் பயணத்திற்கு போடும் வித்தாகவே பார்க்கப்படுகின்றது.
விஜய்யின் கடைசிப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோரும் நடிக்க இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஜனநாயகன் படப்பிடிப்பை விஜய் முடித்ததில் இருந்து இப்படம் குறித்து சரியான அப்டேட்டுகள் வராமல் இருந்தது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு சூப்பரான அப்டேட் வந்துள்ளது.
தீபாவளிக்கு விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் கரூர் சம்பவத்தால் படக்குழு வெளியிடவில்லை.
ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.






