குடியரசாக மாறுகிறது ஜமைக்கா – இங்கிலாந்து மன்னர் சார்லசை அகற்றம்
முடியரசில் இருந்து ஜமைக்கா நாடு குடியரசாக மாறுகின்றது.
அதற்கமைய, நாட்டின் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து இங்கிலாந்து மன்னர் சார்லசை அகற்றும் மசோதாவை ஜமைக்கா அரசு தாக்கல் செய்துள்ளது.
1962 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெற்றாலும், அரசின் தலைவராக இங்கிலாந்து மன்னரே இருப்பார் என்பதை ஜமைக்கா ஏற்றிருந்தது.
இந்நிலையில் இனி ஜமைக்காவை குடியரசாக மாற்றி, குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய உள்ளதாகவும், மன்னர் தேவையில்லை என்றும் ஜமைக்கா அரசு முடிவெடுத்து உள்ளது.




