“ஜெய்லர்-2″ நிறைவு… சென்னை வந்தார் ரஜினி
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி “ஜெய்லர்-2″ க்காக இணைந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புகள் சமீபகாலமாக கோவாவில் நடைபெற்றன. இப்போது கோவாவுடன் தொடர்புடைய காட்சிகள் நிறைவடைந்துள்ளன.
இதனை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இந்தியாவின் பல இடங்களில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்த பாகத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்னா ஆகியோர் மீண்டும் நடிக்கின்றனர்.
மேலும் வித்யா பாலன் மற்றும் அன்னா ராஜன் ஆகியோர் இணைகிறார்கள். சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் மீண்டும் தங்கள் கேமியோ தோற்றங்களில் நடிப்பார்கள் என்றும், நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்தப் படம் ஜூன் 12, 2026 அன்று வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.






