யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று(02) நடத்தப்பட்டுள்ளது.
பெற்றோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





