யாழ் – வல்வெட்டித்துறையில் LTTE தலைவர் பிரபாகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது!
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை பாரம்பரிய உணவு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.


(Visited 10 times, 1 visits today)





