இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இத்தாலி!

இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றது.

வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இத்தாலி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

அத்துடன், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!