செய்தி விளையாட்டு

டி20 உலகக்கிண்ணத்திற்கான இத்தாலி அணி அறிவிப்பு

ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் முறையாகப் பங்கேற்கும் இத்தாலி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பெப்ரவரி 7-ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவில் தொடங்கவுள்ள 20 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டத் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இத்தாலி அணியை வழிநடத்தும் பொறுப்பு, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஹொக்கி வீரரான வெய்ன் மேட்சன் (Wayne Madsen) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும், இத்தாலி அணி தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோரி பர்ன்ஸ் (Joe Burns) உலகக்கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்குப் பதிலாக, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஜே.ஜே ஸ்மட்ஸுக்கு (JJ Smuts) அணியில் இடம் கிடைத்துள்ளது.

குரூப் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலி அணி, வரும் பெப்ரவரி 9-ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் தனது முதல் லீக் போட்டியில் மோதுகின்றது.

அதனைத் தொடர்ந்து நேபாளம், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை இத்தாலி எதிர்கொள்ளவுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!