ஐரோப்பா

இத்தாலி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

இத்தாலி மக்கள் அவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வெயில் அடித்து வருகிறது என்பதும் அதிக வெப்பம் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இத்தாலியில் வெயில் காரணமாக அல்பாயின் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் வெப்பத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்வதற்காக பல்வேறு வழிகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நாட்டு அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டில் உள்ளே இருக்கும் மாறும் தெரிவித்துள்ளது.

இத்தாலி நாட்டில் வரலாறு காணாத வகையில் அடித்து வருவதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அவஸ்தையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!