நொறுங்கி விழுந்த விமானம்: வீதியில் காரின் பயணித்த 5 வயது சிறுமி பலி!
பயிற்சியின் போது இத்தாலிய இராணுவ ஜெட் விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழ் நோக்கி சரிய, சாலையில் ஒடிக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியது. விபத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்ததாக பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ சனிக்கிழமை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் ஒன்பது வயது சகோதரர் பலத்த காயம் அடைந்ததாகவும், பெற்றோர் மற்றும் ஜெட் விமானிக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”விமானி பாராசூட் மூலம் குதித்து ஜெட்டில் இருந்து வெளியேறினார். இது ஒரு பயங்கரமான சோகம். காயமடைந்தவர்களுக்காக எனது பிரார்த்தனை மற்றும் உயிரிழந்தவருக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த சிறுமிக்காக பாதுகாப்பு அமைச்சகமும் தங்கள் தரப்பில் இரங்கலை தெரிவித்துள்ளது.






