குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்குமாறு உத்தரவிட்ட இத்தாலிய நீதிமன்றம்!
மூன்று குழந்தைகள் காடுகளில் வளர்க்கப்பட்ட நிலையில், அந்த குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்குமாறு இத்தாலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல்’அக்விலாவில் ( L’Aquila) உள்ள ஒரு சிறார் நீதிமன்றம் கடந்த வாரம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரித்தானிய – ஆஸ்திரேலியவை பிறப்பிடமாக கொண்ட குறித்த தம்பதியர் ஆஃப்-தி-கிரிட் வாழ்க்கை முறை (off-the-grid) முறையில் தங்களின் மூன்று குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளனர்.
அப்ருஸ்ஸோ (Abruzzo) பகுதியில் உள்ள தங்கள் பண்ணை வீட்டில் அவர்கள் தங்களின் மூன்று குழந்தைகளையும் பராமரித்து வந்துள்ளனர்.
குதிரைகள், கழுதைகள் மற்றும் கோழிகளுடன் காட்டில் ஒரு அழகான வாழ்க்கையை அனுபவித்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நீதிமன்றம் குழந்தைகளின் நல்வாழ்வு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குழந்தைகள் வீட்டிலேயே கல்வி கற்றனர், மற்ற குழந்தைகளுடன் பழகுவதற்கு மிகக் குறைந்த வாய்ப்பு அல்லது வாய்ப்பு இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூக தொடர்புகள் இல்லை, நிலையான வருமானம் இல்லை, குடியிருப்பில் சுகாதார வசதிகள் இல்லை, குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை” என்று சிறார் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்து மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளது.




